Skip to main content
[Part 1] அன்பர்களிடம் அன்னை விரும்பும் மனோபாவம்
- அறிவை நம்பாதே; ஆன்மாவை நம்பு. கடமையை சரிவர செய்து, அமைதியாக இருப்பதே ஆன்மாவை நம்புவதாகும். கடமைகளை செய்துவிட்டு பலனை, அன்னையிடம் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அப்பொழுது மனம் அமைதி ஆகும்; அன்னை அங்கே செயல் படுவார்; பலன் தேடி வரும்.
- சௌகர்யத்தை நாடாதே; செய்யும் வேலையை ஆர்வமுடன் செய். சௌகர்யத்தை நாடுவது என்றால் அன்னை குறிப்பிடுவது வசதியை அல்ல. பிடித்த வேலையை, பழக்கமான வேலையை செய்வதையே சௌகர்யம் என்கிறார் அன்னை. பிடித்த வேலையை நாடும் மனோபாவத்தை மாற்றி, கொடுத்த வேலையை ஆர்வமுடன் செய்வதையே அன்னை நம்மிடம் விரும்புகிறார்.
- பிறருடைய குறையை சொல்லாதே. பிறர் குறையை சொல்வதால் அவர்கள் திருந்துவார்கள் என்பது நம்முடைய மானோபாவம். நம் குறையை நாம் பிறரிடம் காண்கிறோம் என அறிந்து, அதை மாற்றிக்கொள்வது அன்னை விரும்பும் மனோபாவம். நம்மை சுற்றி நல்லவர்கள் மட்டும் இருக்கும் வரையில், நமக்கு பிறரிடம் குறை தோன்றாது இருக்கும் வரையில் நாம் நம் குறையை அறிந்து நம்மை மாற்றி கொண்டே இருக்க வேண்டும்.
- (To be updated)
Comments
Post a Comment