பிரச்சினைகள் தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்

பாரத்தை நாம் சுமப்பதற்க்குப் பதில், அன்னையிடம் கொடுத்துவிட்டால் இனி பாரம் நமக்கில்லை. அன்னை பாரத்தை சுமப்பதுடன், அந்த பிரச்சினையையும் தீர்த்துவிடுவார். 

பாரத்தை அன்னையிடம் சேர்ப்பதெப்படி?
              நகை பேங்கில் இருப்பது அடிக்கடி நினைவில் உறுத்துகிறது என்றால், நகையை நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பதில், மனதிலிருந்து நகையை (பிரச்சினையை) ஒதுக்கி, விலக்கி, அன்னையை நினைவுகூர  வேண்டும். அதன் பலனாக மனம் லேசாகிவிடும். பிரச்சினை தீர்ந்துவிடும். 
             ஒரு பிரச்சினை ஒரு நாளைக்கு 40 முறை நினைவில் வந்து கிலேசமடைந்தால் முதல் நாள் அன்னையை 10 முறை நினைக்க முடிகிறது. நாள் செல்லச் செல்ல 10 நாள் கழித்து ஒரு நாள் அன்னையை 40 முறையும் நினைக்க முடிகிறது. அதாவது பிரச்சினையை முழுவதும் அன்னைக்கு மாற்றியாகிவிட்டது. அன்று பிரச்சினை முழுவதும் தீரும்.

என்று ஒரு பிரச்சினை மனதில் தோன்றும் ஒவ்வொரு முறையும் அன்னையை நினைவுகூர முடிகிறதோ அன்று பிரச்சினை தீர்ந்துவிடும். 

ஆதாரம் : அருளமுதம், ஸ்ரீ கர்மயோகி.

Comments